தேமுதிக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப் பட்டு உள்ளது.
தேமுதிக சார்பில் உச்ச நீதி மன்றத்தில் இன்று புதிய மனு தாக்கல் செய்யப் பட்டது. அந்த மனுவில் தேமுதிகவை சேர்ந்த அதிருப்தி எம் எல் ஏக்களான அருண்பாண்டியன், மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட 7 பேர் வரவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க கூடாது என்றும் கட்சி நடவடிக்கைகளுக்கு அவர்கள் எப்போதும் கட்டுப்பட்டு நடக்க வில்லை என்றும் கூறப்பட்டு உள்ளது.
எனவே, காலியாக உள்ள மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்க தேமுதிக அதிருப்தி எம் எல் ஏக்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அப்படி அவர்கள் வாக்களித்தாலும் அவர்கள் மீதான வழக்கு முடியும் வரை அதை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட கோரிக்கை வைக்கப் பட்டு உள்ளது.
இந்நிலையில் மாநிலங்களவையில் காலியாக உள்ள 7 இடங்களுக்கு அதிமுக சார்பில் 5 வேட்பாளர்களும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒருவரும், திமுக சார்பில் ஒருவரும் என்று வேட்பு மனுத் தாக்கல் செய்து உள்ளனர். இவர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

0 Responses to தேமுதிக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு!