Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் இன அழிப்பு என்றும், அதனை, சர்வதேச விசாரணைகளின் மூலம் வெளிக்கொணர வேண்டும் என்றும் கோரும் தீர்மானமொன்று வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபை அமர்வுகள் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. அதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறித்த தீர்மானத்தை முன்வைத்தார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் குறித்த தீர்மானத்தை எதிர்த்த போதிலும், பெரும்பான்மை வாக்குகளினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இறுதி மோதல்களில் போது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிக்கின்ற அதேவேளை, சர்வதேச சமூகத்தின் பங்களிப்பின்றி நீதியோ அல்லது அரசியல் தீர்வோ கிடைக்கும் என்பதில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையில்லை என்று கூறும் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனிடையே, இறுதி மோதல்களில் நிகழ்த்தப்பட்டது இன அழிப்பு என்று பாவிக்க வேண்டாம் என்றும், ‘இன அழிப்பு’ என்பதற்குப் பதிலாக ‘இன அழிப்புக்கு ஒப்பான’ என்ற வார்த்தையை பாவிக்குமாறும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பரிந்துரைத்துள்ளார். ஏனெனில், விசாரணைகள் ஆரம்பிப்பதற்கு முன் சட்ட ரீதியான பிரச்சினைகளை ‘இன அழிப்பு’ என்கிற சொல் எதிர்கொள்ளும் என்றும், விசாரணைகளின் முடிவிலேயே அது முடிவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கை மீது போர்க்குற்ற விசாரணைகள் அவசியம்: வடக்கு மாகாண சபையில் தீர்மானம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com