Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மதுரையில் தந்தை கருணாநிதியின் பேட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.அழகிரி, சந்திப்பின் போது தலைவர் சொன்னதில் உண்மையில்லை என்று கண் கலங்கினார்.

இன்று அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, மு.க.அழகிரி அன்று காலையில் தமது இல்லத்துக்கு வந்த போது, படுக்கையில் இருந்த தன்னை ஒருமையில் விளித்து.பேசியதாகவும், மேலும் தம் இதயம் நின்று போகும்படி வன் சொற்களைப் பயன்படுத்தியதாகவும் கூறியுள்ள கருணாநிதி, திமுக பொருளாளர் ஸ்டாலின் மீது என்ன காழ்ப்புணர்ச்சியோ தெரியவில்லை, அவர் இன்னும் 3 மாதங்களுக்குள் இறந்து விடுவார் என்று கூறினார்.

இப்படித் தகாத வார்த்தைகளில் மனம் துன்புறும்படி பேசியுள்ளார் என்று கருணாநிதி கூறியுள்ளார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் மதுரையில் தமது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.அழகிரி, தலைவர் சொன்னதில் உண்மை இல்லை என்றும், கட்சிக்காரர்களின் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப் படுவதில்லை என்றும் எடுத்துக் கூறினேன் அவ்வளவுதான். அதற்கு மு.க ஸ்டாலினைப் பற்றி நான் அவதூறாக பேசியதாகக் கூறியுள்ளார்.

தலைவர் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறிவிட்டுக் கண் கலங்கியபடி வீட்டினுள் சென்ற அவரை, அவரது மகன் துரை தயாநிதி கைதாங்கலாகப் பிடித்து அழைத்துச் சென்றார்.

0 Responses to செய்தியாளர்கள் சந்திப்பில் கண்கலங்கிய அழகிரி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com