Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வீரப்பன் கூட்டாளிகள் நால்வர் மீதான மறுவிசாரணை கோரும் மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வீரப்பன் கூட்டாளிகளான சோமு, ஞான பிரகாசம், மீசை மாதையன் உள்ளிட்ட நால்வருக்கும், 1994ம் ஆண்டு கர்நாடக காவல்துறையினர் 22 பேரை கன்னி வெடி வைத்து கொன்ற வழக்கில் கடந்த 2004ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருந்தது, கர்நாடக தடா  நீதிமன்றம்.

இந்த தூக்கு தண்டனை மீதான கருணை மனுவை குடியரசுத் தலைவரும் நிராகரித்து விட்ட நிலையில், இவர்கள் நால்வரின் மீதான குற்றத்தை இல்லை என்று நிரூபிக்க வழக்கை மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், ஏற்கனவே, விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகி இவ்வளவு வருடங்கள் ஆன வழக்கை திரும்பவும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டால் அது தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என்றும், எனவே, தீர்ப்பு வெளியான வழக்கை மறுபடியும் விசாரணைக்கு  எடுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார்.

0 Responses to வீரப்பன் கூட்டாளிகள் மீதான மறு விசாரணை கோரிய மனு தள்ளுபடியானது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com