மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று காங்கிரசுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், ராகுல்தான் பிரதமராவார் என்று, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ப.சிதம்பரம், நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் எந்த கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாது என்று நிலமைதான் இருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அழைக்கப் பட்டால், ராகுல்காந்தி தான் பிரதமர் பொறுப்பு ஏற்பார் என்று சிதம்பரம் கூறியுள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் பிரதம வேட்பாளராக அறிவிக்கப் பட இருந்தார் ராகுல்காந்தி. இருப்பினும் கட்சியின் இப்போதைய நிலை காங்கிரசுக்கு ஏதும் பாதகமாக அமைந்து விட்டால், அது ராகுலையே பாதிக்கும் என்பதால், இந்த முடிவை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கடைசி நேரத்தில் கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

UKKK...um