Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானியப் பிரஜையான ஹூராம் சைக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தங்காலைப் பிரதேச சபையின் தலைவர் சம்பந் சந்திர புஷ்ப விதான பத்திரணவை வழக்கு நிறைவடையும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தங்காலைப் பிரதேச சபைத் தலைவரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடிவிறாந்து விடுத்திருந்த நிலையில், தலைமறைவாக இருந்த அவரை கொழும்பில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர், இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். இதன்போதே கொலை வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த செஞ்சிலுவைச் சங்கப் பணியாளரான ஹூராம் சைக்கை 2011 ஆம் ஆண்டு நத்தார் தினத்தில் கொலை செய்ததாகவும், அவரின் தோழியை தங்காலை பிரதேச சபைத் தலைவரும், அவரது ஐந்து நண்பர்களும் கூட்டாக பாலிற்பலாத்காரம் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

0 Responses to பிரித்தானியப் பிரஜை கொலை வழக்கு: ஆளும் தரப்பு பிரதேச சபைத் தலைவருக்கு விளக்கமறியல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com