யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலுமுள்ள தமது கட்சி அலுவலகங்களை இழுத்து மூடிவரும் ஈபிடிபி கட்சி தற்போது இறுதியாக வல்வெட்டித்துறை நகரிலிருந்த தனது அலுவலகத்தினையும் இழுத்து மூடியுள்ளது.
கடந்த பத்து வருடங்களிற்கு மேலாக செயற்பட்டு வந்திருந்த குறித்த அலுவலகத்திற்கு பொறுப்பாக வல்வெட்டித்துறை நகரசபையின் எதிர்கட்சி தலைவராக செயற்பட்டு வரும் தெய்வேந்திரம் என்பவரே இருந்து வந்திருந்தார்.குறித்த அலுவலகமும் இழுத்து மூடப்பட்டதை தொடர்ந்து கரையோரப்பகுதிகளினில் ஈபிடிபி தனது பிடியினை முற்றாக இழந்துவிடலாமன எதிர்பார்க்கப்படுகின்றது.
நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் ரெக்சியனின் கொலையினையடுத்து தீவகத்தினில் எழுந்த மக்கள் எதிர்ப்பின் தொடர்ச்சியாக தனது பெரும்பாலான அலுவலகங்களை ஈபிடிபி மூடி வருகின்றது.எனினும் அலுவலகங்கள் மூடப்படுகின்ற நடவடிக்கை ஒரு மீளமைப்பு நடவடிக்கையென ஈபிடிபி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Responses to ஈபிடிபியின் வல்வெட்டித்துறை அலுவலகமும் இழுத்து மூடப்பட்டது!