கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியும், அவர்களை கைது செய்தும் துன்புறுத்தி வரும் வேளையில், சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழக மீனவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று இரண்டாவது முறையாக விசாரணைக்கு வந்த போது, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக தலைமை செயலர், இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அந்த விளக்கத்தில் 1974ம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி, இந்திய மீனவர்கள் கச்சத் தீவு அருகில் மீன் பிடிக்க உரிமை இல்லை என்றும், கப்பல்கள் மட்டுமே சென்று வரலாம் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது என்றும், ஆனால் 1976ம் ஆண்டு கப்பல் போக்குவரத்தும் இருக்க கூடாது என்று மீண்டும் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் விளக்கத்தில் தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.
இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணையை வருகிற 27ம் திகதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

0 Responses to கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை இல்லை : மத்திய வெளியுறவு அமைச்சகம்