எமது பிரச்சினைகளை நாமே பேசித் தீர்த்துக் கொள்வோம். வெளிநாட்டுக்குச் சென்று தீர்வினைப் பெறவேண்டிய தேவையில்லை. அதைச் செய்யவும் முடியாது என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்தை எந்தக் காரணம் கொண்டும் குலைக்க அனுமதிக்க முடியாது. அப்படியான முயற்சிகள் தாய் நாட்டுக்கு செய்யும் பாரிய துரோகமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் இன்று வியாழக்கிழமை மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களுடனான சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதனிடையே, தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு- கிழக்கிலிருந்த காலத்தில் சில குழுக்களுக்கு ஆயுதங்களை அரசாங்கம் வழங்கியிருந்ததாகவும், மோதல்கள் முடிவுக்கு வந்தபின் அந்த ஆயுதங்களை மீளப்பெற்றுக் கொண்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to எமது பிரச்சினைகளை நாமே பேசித் தீர்ப்போம்: கோத்தபாய