தொடர்ச்சியாக பிரயோகிக்கப்பட்டு வருகின்ற அரசியல் பின்னணி அழுத்தங்களினால் யாழ்.பொதுசன நூலகத்தின் பிரதம நூலகர் தனது பதவியினை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். ஈபிடிபி சார்பு யாழ்.மாநகரசபையின் நிர்வாகத்திற்குட்பட்டுள்ள பொதுசன நூலகத்தில் பணியாளர்கள் மீதான பழிவாங்கல்கள் சாதாரணமாகியுள்ளது.
அவ்வகையினில் தமக்கு விருப்பமற்ற கணனி இயக்குநரான பணியாளர் ஒருவரை அலுவலக கணனியினில் ஆபாசப்படம் பார்வையிட்டதாக கூறி பழிவாங்கி உள்ளே தள்ள முயற்சிகள் முதல்வராக உள்ள யோகேஸ்வரி பற்குணம் என்பவராலும் ஆணையாளராக பணியாற்றி வரும் பிரணவநாதன் என்பவராலும் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது. அதன் பிரகாரம் குறித்த யாழ்.பொதுசன நூலகத்தின் பிரதம நூலகரிடம் இவ்விருவரும் இணைந்து தட்டச்சிடப்பட்ட கடிதமொன்றினை கையளித்து அதன் அடிப்படையினில் பொலிஸில் முறைப்பாடு செய்ய வற்புறுத்திவருவதாகக் கூறப்படுகின்றது.
குறித்த கடிதத்தினை நூலகர் தாமாகவே அச்சிடப்பட்டது போன்று இவ்விருவரும் இணைந்து அச்சிட்டுள்ளதோடு குறித்த பணியாளர் கணனியில் நீலப்படம் பார்த்ததனை தான் நேரில் பார்வையிட்டதாகவும் தெரிவிக்க வற்புறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஆண்டின் ஜீன்-ஜீலை மாத காலப்பகுதியில் நடந்ததாகக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் அத்தகைய முறைப்பாடொன்றினை ஆறு மாதங்கள் கடந்த பின்னர் செய்யுமாறு நிர்ப்பந்திப்பது எத்தகைய உள்நோக்கத்தைக் கொண்டுள்ளதென பதை அனைவரும் புரிவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் தனக்கு கீழ் பணியாற்றும் குறித்த பணியாளர் அத்தகைய நபரல்ல எனவும் குறித்த கணனியுள்ளிட்ட ஏனைய அனைத்து கணனிகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டவை எனவும் பெண்ணான குறித்த பிரதம நூலகர் தெரிவித்துள்ளார். அத்துடன் குடும்பஸ்தரான குறித்த பணியாளரை சிக்க வைக்கவே தமக்கு பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகவும் இவ்வாறு அப்பாவியான குறித்த பணியாளர் மீதான பொய்க்குற்றச்சாட்டினை நிராகரிப்பதுடன் அரசியல் ரீதியான அழுத்தங்கள் தொடர்ந்தால் தனது பதவியினை ராஜினாமாச செய்யப்போவதாகவும் பிரதம நூலகரான அவர் அறிவித்துள்ளார்.
இதனிடையே குறித்த பணியாளர் ஊடகங்களிற்கு அரச தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டினில் கடந்த இரண்டு மாதங்களிற்கு முன்னதாக பணியிலிருந்து ஆளுநர் சந்திரசிறியின் நேரடிப் பணிப்பில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to தகவல்கள் வழங்கினாராம்! ஆபாச பட சிக்கலில் சிக்க வைக்க யாழ்.மாநகர முதல்வர் சதி!