Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத் தமிழர்கள் கொலைக்கு ஆயுதங்கள் கொடுத்தது என பல்வேறு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையிலேயே பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக மதிமுகவுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை பா.ஜனதா இன்று காலையில் தொடங்கியது.

தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்காக அமைக்கப்பட்ட மூவர் குழுவில் கே.என்.இலட்சுமணன், சக்கரவர்த்தி, சரவண பெருமாள் இடம் பெற்றுள்ளனர். அவர்களுடன் குமாரவேலு, மோகன்ராஜூலு, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் வானதி ஸ்ரீனிவாசனும் மதிமுக தலைமையகமான தாயகம் வந்திருந்தார்.

மதிமுகவின் ஐவர் குழுவில் உள்ள பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி, ஆட்சிமன்றக்குழு செயலாளர் அ.கணேசமூர்த்தி, உயர்நிலைக்குழு உறுப்பினர் இமயம் ஜெபராஜ், சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் சே.செவந்தியப்பன், உயர்நிலைக்குழு உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார், ஆகியோர் வரவேற்றனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.


பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மாநில பா.ஜனதா தலைவர்பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய வைகோ, இலங்கை அரசுடன் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொஞ்சி குலாவுகிறது என்றும், வரலாறு காணாத ஊழல், 528 மீனவர்கள் படுகொலை, ஈழத் தமிழர்கள் கொலைக்கு ஆயுதங்கள் கொடுத்தது என பல்வேறு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையிலேயே பா.ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கூட்டணி கட்சிகள் எல்லா விஷயத்திற்கும் ஒரே கொள்கையை கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சியோடு தேர்தலுக்கு முன்னரோ அல்லது தேர்தலுக்குப் பின்னரோ நேரடியாகவோ, மறைமுகாவோ, கூட்டணி வைத்துக் கொள்ளும் எந்த ஒரு கட்சியுடனும் மதிமுக கூட்டு சேராது என்றும் அவர் தெரிவித்தார். இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை குறித்து பா.ஜ.க.வுடன் வலியுறுத்துவோம் என்றும் வைகோ தெரிவித்தார்.

மத்தியில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமையும், காங்கிரஸ் கட்சியை வெற்றி கொள்ளும் திறன் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே இருக்கிறது எனக் கூறிய வைகோ, கூட்டணி, தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் 5 பேர் கொண்ட குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்றார்.

மோடி அலை நாடெங்கும் மோடி அலை வீசுவதாக தெரிவித்த வைகோ, வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறுவது நிச்சயம் என்றார். தமிழகத்தில் இதுவரை இல்லாத ஒரு பரிமாணம் தேர்தலுக்குப் பின்னர் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

பின்னர் பேசிய மாநில பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், "தே.ஜ. கூட்டணியில் மதிமுக இணைய வந்திருப்பது மகிழ்ச்சி என்றார்.

மேலும், கூட்டணிக்கான பூர்வாங்கப் பேச்சு தொடங்கியுள்ளது, இந்த பேச்சுவார்த்தை தொடரும். வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி நரேந்திர மோடி சென்னை வரும் போது மதிமுக தலைவர் வைகோ மோடியை நேரில் சந்திக்க வேண்டும்" என்றார்.

நன்றி: விகடன்

0 Responses to இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை குறித்து பா.ஜ.க.வுடன் வலியுறுத்துவோம் - வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com