Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடமாகாணத்தில் ஆளுநர் சந்திரசிறி மற்றும் அவரது கட்டுப்பாட்டின் கீழுள்ள நிர்வாக மட்டங்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க மறுப்பதனால் வடக்கு மாகாணசபை சத்தமின்றி செத்துக்கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழும்பியுள்ளன.

இதனிடையே ஆளுநர் சந்திரசிறியினால் மேற்கொள்ளப்பட்ட அரச நியமனங்கள் அனைத்தையும் தற்காலிகமாக இடை நிறுத்த வடமாகாணசபை  எடுத்த தீர்மானம் தொடர்பாக பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு  முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசியலமைப்புக்கு அமைவாக ஆளுநர் சந்திரசிறி நியமனங்களை செய்யததாகவும் அமைச்சரவை அதற்கு அனுமதியளித்தது என்றும் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு முதலமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளதாம். இதேவேளை வடமகாணத்தில் உள்ள அரச திணைக்களங்கள் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வடமாகாண சபை நிறைவேற்றிய 14 தீர்மானங்களும் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றும் அவற்றை நடைமுறைப்படுத்த ஆளுரின் அனுமதி தேவை எனவும் உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக வடமாகாண சபையின் தவிசாளர் சிவஞானம் அரச திணைக்கள் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அளுநரின் அனுமதி கிடைக்கவில்லை என கூறியதாக தெரியவருகின்றது. இத்தகைய போக்கு தொடர்வதால் வடக்கு மாகாணசபையினை நடத்திச்செல்வதென்பது பெரும் கேள்விக்குறிக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

0 Responses to வடமாகாணசபையின் எதிர்காலம் கேள்விக்குறியாக!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com