இலங்கை சிங்கக்கொடியினை ஏற்றி வைக்க அரச பங்காளியான முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர் மறுதலித்துள்ள நிலையில் தானாக முன்வந்து அதனை சாதித்துள்ளார் வடக்கு மாகாணசபை அமைச்சர் டெனீஸ்வரன். மன்னாரில் இன்று இடம்பெற்ற பாடசாலை நிகழ்வொன்றில் பிரதம விருந்தினர்களாக வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரென இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
நிகழ்வில் ஒரு அங்கமாக இலங்கை சிங்கக்கொடியினை ஏற்றி வைக்க அரச பங்காளியான முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர் அழைக்கப்பட்டிருந்த போதும் அதனை அவர் மறுதலித்துள்ளார். அதனையடுத்து அதனை பொறுப்பேற்றுக்கொண்ட கூட்டமைப்பு அமைச்சர் டெனீஸ்வரன் தானாக முன்வந்து அதனை ஏற்றி வைத்துள்ளார்.
கூட்டமைப்பு சார்பில் ஒருபுறம் போர்க்குற்றம், இனஅழிப்பு என சர்ச்சைகள் தொடர மறுபுறத்தே அமைச்சரோ தானாக சிங்கக்கொடியேற்றி வைத்துள்ளார். ஏற்கனவே கூட்டமைப்பின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் கொடியேற்றல் நிகழ்வினை புறக்கணித்திருந்த நிலையினில் டெனீஸ்வரனது செயற்பாடு கடும் விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது.

0 Responses to சம்பந்தன் வழியில் தொண்டர்கள்! அமைச்சர் டெனீஸ்வரன் சிங்கக்கொடியேற்றினார்!