உக்ரேய்னில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து மேற்கொண்டு வரும் கிளர்ச்சிப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளதுடன், அமைதிப் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது.
உக்ரேய்ன் தலைநகர் கியேய்வில், அரச அலுவலக கட்டிடங்களை முற்றுகையிட்டும், ஆக்கிரமித்தும் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் பொதுமக்கள். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து போக மறுத்தல், நாட்டின் வேலையில்லா மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை காரணம் காட்டி அந்நாட்டு அதிபர் பதவியை இராஜினாமா செய்வதுடன் தற்போதைய அரசு கலைக்கப்படவேண்டும் என்பது ஆர்ப்பாட்டக் காரர்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில், கியெய் சுதந்திர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும், கலகத் தடுப்பு பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இரு ஆர்ப்பாட்டக் காரர்கள் சுடப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களை மேலும் அதிர்ச்சி அடையச் செய்திருந்தது. ஆர்ப்பாட்டக் காரர்களுடன் உக்ரேய்ன் அரசு மேற்கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சியும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. உக்ரேய்ன் அதிபர் விக்டர் யனுகோவிச் நாட்டில் தற்போதுள்ள சிக்கல்களை முடிவுக்கு கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்த போதும் அதனை நம்புவதற்கு எவரும் தயாராக இல்லை. இந்நிலையில் ஆர்ப்பாட்டக் காரர்கள் தீவிரவாதிகள் போன்று செயற்படுகிறார்கள். இது உண்மையில் தீவிரவாதமே என அரசு துறை அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

+(Custom).jpg)

0 Responses to உக்ரேய்னில் அரசுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம் : அமைதிப் பேச்சுவார்த்தையும் தோல்வி