Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் மக்களையும், அவர்களின் வரலாற்று ரீதியான பூர்வீக நிலங்களையும் பிரேரணைகளினாலும், தீர்மானங்களினாலும் பாதுகாத்துவிட முடியாது. அதற்கு இராஜதந்திர ரீதியிலான அணுகுமுறையும், கடின உழைப்பும் அவசியமென்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களையும் அவர்களது பூர்வீக நிலங்களையும் பாதுகாக்க மேடைகளிலும், பத்திரிகைகளிலும் முழங்கினால் மட்டும் போதாது. அதற்காக யாதார்த்தமான வழியில் கடினமாக உழைக்க வேண்டும். தந்திரோபாயமான அணுமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இது பொறுப்பில் உள்ள அனைவரினதும் கடமையாகும் என்றார்.

தீர்மானங்களை எடுப்பவர்களும், பிரேரணைகளை நிறைவேற்றுகின்றவர்களும் அதனை பத்திரிகைகளில் வெளியிட்டுவிட்டால் தங்களது கடமை முடிந்து விட்டதாக சென்று விடுகின்றனர். இதற்காக அவர்கள் தங்களது சிறிய உழைப்பை கூட மேற்கொள்ளவதாக இல்லை. இவ்வாறான நிலைமைகள் இப்போது இருக்கின்ற நிலைமைகளை மேலும் பாதிப்புக்குள்ளாக்குவதாகவே இருக்கும் என்று அவர் கூறினார்.

தமிழ் மக்கள் தற்போதைய சூழலில் அறிவுபூர்வமாக சிந்தித்து யாதார்த்தமான அணுகுமுறைகளை பின்பற்றி விடயங்களை சாதித்துகொள்ளவதே சிறந்தது  என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to தமிழ் மக்களை பிரேரணைகளினாலும், தீர்மானங்களினாலும் பாதுகாக்க முடியாது: ஈ.பி.டி.பி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com