வடமாகாணசபையின் பிரதம செயலாளர் விஜயலட்சுமி றமேஸ் கொழும்பில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டிற்கான ஆலோசனையினை மஹிந்தவே வழங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது.
கொழும்பில் அமைச்சர் றிசாத் பதியூதீனின் அலுவலகத்தில் நடத்தப்பட்டிருந்த குறித்த பத்திரிகையாளர் மாநாட்டில் கூட்டமைப்புப் சார்பு வடக்கு மாகாணசபை தனக்குப் பக்கச் சார்பாக செயற்பட அச்சுறுத்துவதாகக் பிரதம செயலாளர் விஜயலட்சுமி றமேஸ் தெரிவித்திருந்தார். அத்துடன் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் உள்ளுரிலுமிருந்து தொலைபேசி மூலமான அச்சுறுத்தல்கள் தனக்கு விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எனினும் முன்னதாகத் தனக்கு முன்பிருந்த சீனியர்களைப் புறந்தள்ளி இப்பதவிக்கு வந்து சேர அமைச்சர் றிசாத் பதியூதீனே உதவியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இப்பத்திரிகையாளர் மாநாட்டினையும் அவரே நடத்தியிருந்ததாகவும் நம்பப்படுகின்றது. எனினும் குறித்த பிரதம செயலாளரை இடமாற்றஞ் செய்யுமாறாகக் கூட்டமைப்பு கோரிக்கைகளை விடுத்து வந்திருந்த நிலையில் ஆளுநர் சந்திரசிறி சகிதம் அவரை கொழும்பிற்கு அழைத்த மஹிந்த எக்காரணங்கொண்டும் இடமாற்றம் செய்ய அனுமதிக்கமாட்டேனென உறுதி வழங்கியதுடன் தொழிற்சங்கத்தில் முறையிடவும் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தவும் ஆலோசனை வழங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையினிலேயே அண்மையினில் தெல்லிப்பழைக்கு வருகை தந்திருந்த மஹிந்தவிடம் பிரதம செயலாளரது இடமாற்றம் தொடர்பாக முதலமைச்சர் விக்கினேஸடவரன் பேச்சு நடத்திய போது தொழிற்சங்க அழுத்தங்களால் அவ்விடமாற்றத்தை மறுதலித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

0 Responses to மஹிந்தவே குழப்பங்களின் நாயகன்!