Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தீவிரவாதி என்று உறுதி செய்யப்பட்ட புல்லரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரிய புல்லரின் மனைவி மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.

1993 ஆம் ஆண்டு டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு காரணமான தேவேந்திர பால் சிங் என்கிற புல்லருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை உறுதி செய்தது.

இந்தத் தூக்குத் தண்டனையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று பல முறை மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்தும், அவைகள் ரத்து செய்யப் பட்டன.
இந்நிலையில் 2003 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு மனு, கால தாமதமாக 2011 ஆம் ஆண்டு நிராகரிக்கப் பட்டது. இந்நிலையில் கால தாமதமாக நிராகரிக்கப் பட்ட கருணை மனுக்களின் மீதான கோரிக்கையை ஏற்று, 15 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்ததை கருத்தில் எடுத்துக் கொண்ட புல்லரின் மனைவி இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், காலம் கடந்து தமது கணவரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து இருக்கிறார் என்று கூறி, அவரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளார். உச்ச நீதிமன்றமும் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்து இருக்கிறது.

0 Responses to தீவிரவாதி புல்லரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனு ஏற்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com