Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இன்றைய ராசி பலன் | 25.02.2014

பதிந்தவர்: தம்பியன் 25 February 2014

மேஷம்
அம்பிகை வழிபாட்டில் ஆர்வம் செலுத்தும் நாள். குடும்பப் பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. திடீர் செலவுகளைச் சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கக் கூடிய நிலைமை ஏற்படலாம்.

ரிஷபம்
விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும் நாள். உங்கள் வளர்ச்சியைக் கண்டு உறவினர்கள் ஆதங்கப்படுவர். தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் விரயங்கள் குறையும்.

மிதுனம்
பொதுக்காரியங்களில் ஈடுபட்டு புகழ் சேர்க்கும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். புதுமுயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கடகம்
முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுக்கும் நாள். பிள்ளைகள் வழியில் பெருமை வந்து சேரும். கைமாத்தாகக் கொடுத்த பணம் திரும்பி வரலாம். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

சிம்மம்
பெற்றோரின் ஆதரவால் பெருமை கூடும் நாள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். புது ஒப்பந்தங்கள் வந்து சேரும். நல்ல நண்பர்களின் சந்திப்பு கிட்டும். தொழிலில் பொறுப்புகள் கூடும்.

கன்னி
தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும் நாள். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். பழைய பிரச்சினைகளைத் தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள்.

துலாம்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். மனதில் இனம் புரியாத சந்தோஷம் குடிகொள்ளும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடருவீர்கள்.

விருச்சகம்
நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். தொலைபேசி வழித் தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் எண்ணம் மேலோங்கும்.

தனுசு
எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டிய நாள். அயல்நாட்டுத் தொடர்பால் அனுகூலச் செய்தி வந்து சேரும். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள்.

மகரம்
விடியும் பொழுதே வெற்றிச் செய்திகள் வந்து சேரும் நாள். செய்யும் தொழிலில் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். பண வரவு திருப்தி தரும். வீட்டில் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

கும்பம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் எண்ணம் மேலோங்கும்.

மீனம்
தனலாபம் கிடைக்கும் நாள். கடந்த இரண்டு நாட்களாக நடைபெறாத காரியமொன்று இன்று நடைபெறும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வகையில் கணிசமான தொகை கைக்கு கிடைக்கும்.

0 Responses to இன்றைய ராசி பலன் | 25.02.2014

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com