Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அவுஸ்திரேலியாவில் ஜீலோங் நகரில் அமைந்துள்ள தொழிற்சங்கக் கட்டடத்தில் இன்று தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

விக்ரோறிய மாநிலத்தில் மெல்பேர்ணிலிருந்து 100 கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள ஜீலோங் நகரின் பழமையும் புகழும் வாய்ந்த தொழிற்சங்கக் கட்டடத்திலேயே தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிக் கௌரவிக்கப்பட்டது.

விக்ரோறிய மாநிலத்தில் கடந்த மூன்றாண்டுகளில் பலவிடங்களில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

அவ்வகையில் ஜீலோங் நகரத்தின் தொழிற்சங்கக் கட்டடத்தில் ஏற்கனவே இருதடவைகள் தேசியக் கொடி ஏற்றி பறக்கவிடப்பட்டது. இன்று மூன்றாவது தடவையாக தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது.

தமிழீழத் தேசியக்கொடி பற்றியும் தமிழீழ விடுதலைப் போராட்டம் பற்றியும் விளக்கம் கொடுக்கப்பட்ட பின்னர் ஜீலோங் தொழிற்சங்கப் பிரதிநிதி ரிம் குடீன் அவர்களால் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் தமிழர்களுடன் பிறவின செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.

கொடியேற்றல் நிகழ்வைத் தொடர்ந்து எதிர்வரும் ஐ.நா மனிதவுரிமை கூட்டத்தொடரில் தமிழீழம் குறித்த பொதுவாக்கெடுப்பை நடாத்தும்படியும் சிறிலங்கா அரசாங்கம் மீது நியாயமான, நடுநிலையான விசாரணை நடாத்தும்படியும் கோரிக்கை விடப்பட்டது.  தொடர்ந்து சனல்-4 இன் கொலைக்களம் ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது.





0 Responses to அவுஸ்திரேலியாவில் ஜீலோங் நகரில் தமிழீழத் தேசியக் கொடியேற்றல் நிகழ்வு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com