Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

29.01.2014 அன்று நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் (Maanweg 174 Den Haag) அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆரம்பமான ஐ.நா. நோக்கி நீதிக்கான நடைபயணமானது 01.02.2014 இன்று நாங்காவது நாளாக 40km தூரத்தை கடந்து பெல்யீயம் நாட்டில் உள்ள Wuestwezel நகரத்தை வைந்தடைந்தது.

நடைபயணத்தில் ஈடுப்பட்டுள்ள உறவுகள் பெல்யீயம் நாட்டில் வாழ்கின்ற தமிழ் உறவுகளை சந்தித்து தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்து கலந்துரையாடவும் உள்ளார்கள்.

நெதர்லாண்ட் நாட்டில் ஆரம்பமான நடைபயணமானது பெல்யீயம்,லுக்சன்பூர்க்,யேர்மனி,பிரான்ஸ் மற்றும் சுவிஸ் நாடுகளுடாக சென்று 10.03.2014 அன்று     ஐ.நா.வின் மனிதவுரிமை மன்றத்தை வந்தடையவுள்ளது. அன்றைய தினம் மாபேரும் எழுச்சிப் போராட்டம் இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத் தக்கதாகும்.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த திரு சூரீபிரித்தானியாவைச் சேர்ந்த திரு சிவந்தன்,யேர்மனியைச் சேர்ந்த திரு செந்தில்குமரன் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திரு வித்தியானந்தன்  ஆகியோர் கடும் குளிர் மழை எனக் காலநிலை சீராக இல்லாத சூழ்நிலையிலும் மாவீரர்களினதும் மக்களினதும் நினைவுகளை மனத்தில் பதித்து உறுதியோடு நடந்து வருகின்றனர்.  தமிழின  அழிப்பை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக பல்வேறு மொழிகளில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணத்தில் பங்கெடுக்கும் நெதர்லாண்ட் நாட்டை சேர்ந்த சூரீ,பிரித்தானியாவை சேர்ந்த சிவந்தன்,யேர்மனியை சேர்ந்த செந்தில்குமரன் மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வித்தியானந்தன்  ஆகியோரின் சனநாயகப் போராட்டம் வெற்றி அளிப்பதற்காகவும் அவர்களை வாழ்த்துவதற்காகவும் உலகத் தமிழ் மக்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்: 0031684999900 மேலதிக தகவல் அறியத்தரப்படும்.

0 Responses to மண்டியிடாத வீரத்துடன் 4ம் நாளாக ஐ.நா நோக்கித் தொடருகின்ற நீதிக்கான நடைபயணம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com