Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வர்த்தக ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை

பதிந்தவர்: தம்பியன் 02 February 2014

சிரேஷ்ட சிங்கள ஊடகவியலாளர் மெல் குணசேகர இனந்தெரியாத சிலரின் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்.

பத்தரமுல்ல - சுபூத்திபுர பகுதியில் உள்ள அவரது வீட்டில், அவர் தனியாக இருந்த போது, அடையாளம் தெரியாத சிலர் அவரை கொலை செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட வேளையில் அவரது வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் குரைக்கவில்லை என்று அவரது வீட்டின் அயலவர்கள் தெரிவித்துளளனர்.
இந்த நிலையில் குறித்த வீட்டுக்கு வழமையாக வரும் தரப்பினராலேயே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவற்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மெல் குணசேகர பிரான்சின் ஏ.எப்.பி ஊடகத்தின் ஊடகவியலாளராகவும், இலங்கையின் பல பத்திரிகைகளிலும் கடமையாற்றியுள்ளார்.
அத்துடன் அவர் தற்போது பிட்ச் தரப்படுத்தல் நிறுவனத்தின் இணை உதவி பணிப்பாளராகவும் செயற்பட்டுள்ளார்.

0 Responses to வர்த்தக ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com