இனப்படுகொலைக்கான நீதி கோரி சர்வதேச விசாரணைக்கானத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு மஹிந்தவே காரணமென வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபை உறுப்பினர்கள் கோருவதனை வழங்கியிருந்தால், மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இக்குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
உறுப்பினர்களின் உணர்வுகளே தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் மற்றும் மாகாண பிரதம செயலாளர் தெரிவின் போது முதலமைச்சரின் கருத்துக்களைக் கோரியிருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அவ்வாறு செய்யவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். பிரதம செயலாளர் நியமனம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் கூட தீர்மானம் நிறைவேற்றப்படுவதனை தடுத்திருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to இனப்படுகொலை விசாரணை கோர மஹிந்தவே காரணம்!