Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

29.01.2014 அன்று நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் (Maanweg 174 Den Haag) அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆரம்பமான ஐ.நா. நோக்கி நீதிக்கான நடை பயணமானது வெற்றிக்கரமாக நேற்று ஒன்பதாவது நாளாக 30km தூரத்தை கடந்து பெல்ஜீயம் நாட்டில் உள்ள Tienen நகரத்தை வந்தடைந்தது.

மழையும் குளிருமாகச் சீரற்ற காலநிலையாக இருந்தபோதிலும் உறுதி தளராமல் தாய்மண்ணை மனதில் நிறுத்தி மனிதநேயப் பணியாளர்கள் நடை பயணத்தை தொடர்கின்றனர்.

நடை பயணத்தில் ஈடுபட்டுள்ள மனித நேயப்பணியாளர்களுக்கு தமது ஆதரவை வழங்கும் முகமாக சீரற்ற காலநிலையானபோதும் தமிழ் மக்களும் நடை பயணத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

தமிழ் மக்களுடைய செயற்பாடுகள் தமக்கு மகிழ்வையும் புதிய உற்சாகத்தையும் தருவதாக நடை பயணத்தை முன்னெடுக்கும் மனித நேயப்பணியாளர்கள் அறியத்தந்துள்ளார்கள்.

எதிர்வரும் மார்ச் மாதம் 10 திகதி ஐநா முன்றலில் வீரத் தமிழ் மகன் முருகதாசன் திடலில் உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூட வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

0 Responses to தமிழர்களுடைய பலத்த ஆதரவுடன் 9வது நாளாக தொடரும் ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடை பயணம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com