சர்வதேச அமைப்புக்களது பிரதிநிதிகள் மற்றும் ராஜதந்திரிகளிற்கும் இலங்கை அரசு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைந்து வாழ அனுமதிக்கப்பட்டாள்தாக கூறப்படும் முன்ன போராளிகளிற்குமிடையே சந்திப்பு நடைபெறுவது இது தான் முதல் தடைவையல்ல.
அது பற்றி இலங்கை அரசு அறிந்திருக்காதென கூறுவதும் வேடிக்கையானதென்கிறார் ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணை நிறுவனமான சர்வதேச குடிபெயர்வு அமைப்பின் உள்ளுர் அதிகாரியொருவர்.
அமெரிக்க அதிகாரிக்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கும் இடையில் இரகசியப் பேச்சுவார்த்தை நடாத்த ஐக்கிய நாடுகள் அமைப்பான ஜ.ஓ.எம் ஏற்பாடு செய்திருந்தது என இலங்கை அரசு தற்போது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமை தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.தனது பெயரை அடையாளப்படுத்த விரும்பாத அவ்வதிகாரி வடக்கிற்கு விஜயம் செய்யும் சர்வதேச பிரதிநிதிகள் முன்னாள் போராளிகளது தற்போதைய நிலையினை கண்டறிய ஆர்வம் காட்டுவது இயல்பெனவும் தெரிவித்தார்.
குறித்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணை நிறுவனமான சர்வதேச குடிபெயர்வு அமைப்பு அமெரிக்க பிரதிநிதியுடனான இரகசிய ஏற்பாடுகளை செய்திருந்ததாகத் இலங்கை அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. கிளிநொச்சியில் இந்த இரகசிய சந்திப்பு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச குற்றச் செயல்கள் தொடர்பிலான அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஸ்டீவன் ரெப், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசனும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் அபைம்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினேய் நான்டியின் அனுமதியுடன் இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாகவே இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனினும் இலங்கை அரசுடன் இணக்கப்பாட்டுடனேயே செயற்படும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணை நிறுவனமான சர்வதேச குடிபெயர்வு அமைப்பு ஜ.ஓ.எம்மின் உள்ளுர் அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சின் பணிப்பின் பேரில் முன்னாள் போராளிகளிற்கு வழங்கியிருந்த புனர்வாழ்வு பெற்றமைக்கான அடையாள அட்டைகளைக் கூட பலாத்காரமாகப் பறித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஸ்டீவன் ரெப் - முன்னாள் போராளிகள் சந்திப்பு!! இலங்கை அரசிற்கு தெரியாததொன்றல்ல!