யுத்தத்தைக் காட்டிலும் பேச்சுவார்தையே இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத் தரும் என்று தாம் நம்பி இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பெங்களுரில் இடமபெற்ற பெண்கள் சம்பந்தமான நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே தாம் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட முற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக விடுதலைப் புலிகள் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அவசியம் என்று விதித்திருந்த நிபந்தனையையும் தாம் ஏற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
எனினும் விடுதலைப் புலிகள் இவ்வாறான பேச்சுவார்த்தைகளை எந்த அரசாங்கத்துடனும் நடத்த விரும்பவில்லை.
தேர்தல்களுக்குச் சில தினங்களுக்கு முன்னரே தம்மை அவர்கள் கொலை செய்ய முற்பட்டதாகவும் சந்திரிகா இதன் போது சுட்டிக்காட்டினார்.

0 Responses to பேச்சுவார்த்தையே இனப் பிரச்சினைக்குத் தீர்வைத் தரும் என நம்பினேன் – சந்திரிக்கா