எம்மை எமது சொந்த இடத்திலையே குடியேற்ற வேண்டும். எமது வளமான காணிகளை விட்டு நாம் காட்டுக்குள் குடியேற மாட்டோம் என சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டினில் கிழக்கின் களநிலவரங்களை கண்டறிய யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் குழுவொன்று பயணமொன்றினை மேற்கொண்டிருந்தது.தமது பயணத்தின் ஓர் அங்கமாக சம்பூர் முகாம் மக்களையும் குழுவினர் சந்தித்திருந்தனர்.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர்ப் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள சம்பூர்க் கிராமத்தை சேர்ந்த மக்கள் யுத்தம் காரணமாக கடந்த 2006 ஏப்ரல் மாதம் தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தனர். அவர்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படாமல் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிளிவெட்டி, பட்டித்திடல், மனைச்சேனை, கட்டைப்பறிச்சான் போன்ற நலன்புரி நிலையங்களிலையே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக சம்பூர் வாசி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தமது சொந்த இடங்களில் குடியேறிவிட்டார்கள். ஆனால் 2006ம் ஆண்டு யுத்தம் ஆரம்பித்த போதே இடம்பெயர்ந்தோம். எட்டு வருடங்கள் ஆகின்ற நிலையிலும் நாங்கள் சொந்த இடங்களில் குடியேறவில்லை.இப்போது நாங்கள் இருக்கின்ற காணி தனியாருக்கு சொந்தமானது அவர்கள் எம்மை எந்த நேரமும் இங்கிருந்து செல்லுமாறு கூறலாம்.
இந்திய நிதியுதவியுடன் அனல் மின் நிலையம் அமைக்கப்படவுள்ளமையின் காரணமாகவே எம்மை எமது சொந்த இடங்களில் குடியேற்றவில்லை என்கிறார்கள். எமது சொந்த இடத்தில் ஏக்கர் கணக்காக விவசாயம் செய்து வசதியாக வாழ்ந்தனாங்கள். இன்று எந்த தொழில் ஆதாரமும் இன்றி தின கூலி வேலைகளுக்கு செல்கின்றோம். எங்கள் வளமான காணிகளை பறித்து விட்டு மக்கள் வாழ முடியாத மிருகங்கள் நிறைந்த காட்டு பகுதிக்குள் எம்மை குடியேற்ற முயல்கின்றனர்.
எமக்கு எந்த மாற்று காணிகளும் வேண்டாம். எம்மை எமது சொந்த இடத்திலையே குடியேற்ற வேண்டும். எமது வளமான காணிகளை விட்டு விட்டு நாம் காட்டுக்குள் குடியேற மாட்டோம் என ஊடகவியலாளர்களிடம் அவர்கள் தெரிவித்தனர்.

0 Responses to சொந்த மண்ணே வேண்டும்! மாற்றிடம் தேவையில்லை - சம்பூர் மக்கள்!!