Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுசெல்லும் திட்டத்துடன் தொடர்புடைய அதிகாரிகளது கொடும்பாவிகள் கிளிநொச்சி பரந்தன் பிரதான பேரூந்து நிலையத்தில் கடந்த புதன்கிழமை இரவு வேளை இனந்தெரியாத நபர்களினால் கட்டப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடப்பட்ட 4 பேரின் உருவப் பொம்மைகள் அமைக்கப்பட்டு அதில் வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தாகவும் அவற்றினை இலங்கைப்n பாலிஸார் அகற்றியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் வரையான இரணைமடுக் குடிநீர்  விநியோகத் திட்டத்திற்கு கையொப்பமிட்ட விவசாய அமைப்பு பிரதிநிதியொருவர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதித் திட்டத்தில் யாழ்ப்பாணத்திற்கு இரணைமடு நீரினைக் கொண்டுசெல்லும் திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டப்பணிப்பாளர்;, இத்திட்டத்திற்கான நீர்ப்பாசன பொறியிலாளர்;, நீர்வழங்கல் வாடிகாலமைப்புச் சபையின் அதிகாரி; ஆகியோரின் உருவப்பொம்மைகள் அமைக்கப்பட்டு அதில் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த உருவபொம்மைகள் யாரால் வைக்கப்பட்டன என்பது தொடர்பில் தெரியவில்லையெனவும் இதுதொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இவை அகற்றப்பட்டதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

0 Responses to இரணைமடுவிலிருந்து யாழிற்கு குடிநீர்! போர்க்கொடி தூக்கும் பொது அமைப்புக்கள்!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com