Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் பொறுமை இழக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான மூன்றுநாள் விஜயத்தை நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை மேற்கொண்டு வந்த அவர், கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் அரச, எதிர்க்கட்சி மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரநிதிகளைச் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் கொழும்பில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் மோதல்களினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் சுயாதீனமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதற்கு அமெரிக்கா எப்போதுமே ஆதரவளித்து வந்துள்ளது. ஆனாலும், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவது தொடர்பில் இலங்கை அக்கறை கொள்ளவில்லை. எனவே, இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் பொறுமை இழக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.

இலங்கையில் நீதி, மீள் நல்லிணக்கம், மோதல் கால சம்பவங்களுக்கான பொறுப்புக் கூறல் உள்ளிட்ட விடயங்களில் இலங்கை போதுமான முன்னேற்றத்தைக் காட்டவில்லை என்ற அமெரிக்காவின் கவலைகளை இலங்கை அரசாங்கத்திடம் தெரியப்படுத்தியுள்ளதாக நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகளுக்கான மரியாதை மோசமடைந்து வருகின்றமை, மதச் சிறு பான்மையினருக்கு எதிரான தொடர் தாக்குதல்கள், சட்டத்தின் ஆட்சி சீர்கெட்டு ஊழல்களும் சட்டத்தின் பிடியில் குற்றவாளிகள் சிக்காத தன்மையும் இலங்கையின் ஜனநாயக பாரம்பரியத்தின் பெருமையை சீரழிக்கின்றது. அத்தோடு, இலங்கைக்கு வரும் வெளி நாட்டவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை ஏற்கமுடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் மீள் நல்லிணக்கத்தையும் ஜனநாயக ஆட்சியையும் நீதி மற்றும் பொறுப்புக்க கூறலையும் ஏற்படுத்துமாறு வலியுறுத்தி  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத கூட்டத்தொடரின் போது மூன்றாவது தீர்மானத்தையும் அமெரிக்கா கொண்டுவரும். ஆனாலும், அந்த தீர்மானத்தில் என்ன வகையான வாசகங்கள் இருக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் பொறுமை இழக்கப்படுகிறது: நிஷா தேசாய் பிஸ்வால்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com