Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பேரம் பேசும் சக்தியை இழந்துள்ள தமிழினம் புத்திசாலித்தனமான அரசியல் அணுகுமுறைகளினூடு தமது பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முயல வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) வலியுறுத்தியுள்ளது.

விவேகமற்ற அரசியல் நடவடிக்கைகளும், தேவையற்ற உணர்ச்சி வசப்படுதல்களும் ஆபத்தையே விளைவிக்கும் என்றும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

கிளிநொச்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களிடம் தற்போது பேரம் பேசும் சக்தி இல்லை. அதனை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். பேரம் பேசுகின்ற பலம் இருந்த காலத்தில் வெளிநாட்டு பிரதிநிதிகள் முதல் அனைவரும் கிளிநொச்சிக்கு வந்து சென்றார்கள். ஆனால், தற்போது அந்த நிலைமை இல்லை. இந்த நிலையில் தமிழ் மக்களின் ஒவ்வொரு அணுகுமுறையும் நிதானமாக விவேகமானதாக அமையவேண்டும். தற்போதைய சூழ்நிலையில் சிறந்த மதிநுட்பமான இராஜதந்திர அணுகுமுறைகள் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

எமது மக்கள் திரும்பவும் ஒரு ஆபத்தை சந்திக்கும் நிலையில் இல்லை, எனவே நாம் எம் மக்களின் வாழ்நிலைகளை கட்டியெழுப்பவேண்டும். அதற்காக அனைவரும் கூட்டாக அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும். மக்கள் தங்களின் பிரதிநிதிகளை தெரிவு செய்வது அவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கே. ஆனால், பல மக்கள் பிரதிநிதிகள் தீர்மானங்களை எடுப்பதிலும், ஊடகங்களில் அறிக்கைகள் விடுவதிலும் தங்களின் மக்கள் பணி முடிந்துவிட்டதாக எண்ணி செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலைமை தெரிவு செய்யப்பட்ட மக்களின் வாழ்க்கையினையே பாதிப்புக்குள்ளாகிறது. எனவே இவ்வாறான நிலைமைகள் எதிர்காலத்திலும் தொடராமல் இருப்பதற்கு மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

0 Responses to பேரம் பேசும் சக்தியை இழந்துள்ள தமிழினம் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும் - ஈபிடிபி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com