தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு இடம் பெறுகின்றமையை கண்டித்தும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து எவ்வாறு அவற்றை வென்றெடுக்க முடியும் என்பது தொடர்பான மாநாடு இரண்டாவது நாளாக இன்று இலண்டனில் இடம்பெற்றது.
நிகழ்வின் முதல் அம்சமாக தமிழ் மகா பிரபாகரனின் கடின உழைப்பில் தயாரிக்கப்பட்ட 'திஸ் லான்ட் பிலோங்ஸ் ரு ஆமி ' எனும் ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. யுத்தத்திற்கு பிந்திய இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் எவ்வாறு பேரினவாத அடக்கு முறைக்குட்படுத்தப்பட்டுள்ளன என்பதை காட்சிகள் சித்தரித்திருந்தன.
தொடர்ந்து உரை நிகழ்திய இஸ்ரேலிய நாட்டு பேராசிரியர் ஒரின் - நில உரிமைத்துவம் மற்றும் மனித உரிமை சார்ந்த விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தினார். குறிப்பாக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் நில அபகரிப்பின் ஊடாக தமிழர்களது உரிமைகள் எவ்வாறு மீறப்படுகின்றன அவற்றிற்கு தீர்வு காணும் வகையில் அல்லது தடுக்கும் வகையில் சர்வதேச சமுகத்துடன் இணைந்து எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்பது குறித்தும் தெளிவுபடுத்தினார். சர்வதேச தரத்திலான தரவுகள் சட்டம் மற்றும் கோட்பாடு ஆகியவற்றை ஒப்பிட்டு இலங்கை விடயத்தில் எவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் போன்றவற்றையும் அறிவுறுத்தினார். சேபியா, ஈரான், எஸ்தோனியா, சூடான் மலேசியா துருக்கி இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளில் மக்கள் எதிர் கொண்டிருந்த இவ்வாறான பிரச்சினைகளை உதாரணமாக எடுத்துரைத்து இதன் மூலம் பாதிக்கப்படும் தமிழ் தாயக மக்களை எவ்வாறு காப்பாற்ற முடியும் அல்லது நீதியை பெற்றுக் கொடுக்க முடியும் என்பது குறித்து பரிசீலித்தார்.
தென் சூடான் ,சூடானிலிருந்து பிரிந்ததும் இஸ்ரேல் பலஸ்தீனம் மற்றும் இந்தியா பாகிஸ்தான் ஆகியவற்றையும் மேற்கோள் காட்டினார். குடியுரிமை மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஓர் ஆணித்தரமான ஆதாரமாக காணிகள் அமைவதாக குறிப்பிட்ட அவர் நில உரிமைத்துவத்தைத் தக்க வைத்துகொள்வது மிக முக்கியமானது என குறிப்பிட்டார்.
எவ்வாறான வகையில் நில உரிமைத்துவத்தை அரசு தம்வப்படுத்திக் கொள்கிறது என கேள்வி எழுப்பிய அவர் கடந்த கால தரவுகளை மேற்கோள் காட்டி வலுக்கட்டாயமாக மக்களை வெளியேற்றி நிலம் பறிக்கப்படுவதையும். இரண்டாவதாக ஆயுதமாக இயற்றப்படும் சட்டங்களை மேற்கோள் காட்டி அரசு காணிகளைத் தம்வசப்படுத்திக் கொள்கிறது என்பதையும் தெளிவுபடுத்திய அவர் அரசின் புதிய திட்டங்கள் அபிவிருத்தி திட்டங்ன் மற்றும் கலாச்சார ரீதியான கட்டுப்பாடுகள் ஆகியவற்றை ஏற்படுத்தி நிலங்களின் உரிமைத்துவம் மாற்றப்படுவதுடன் வசப்படுத்திக் கொள்வதையும் சுட்டிக்காட்டினார். மேற்குறிப்பிட்ட ஆதாரங்களையும் தரவுகளையும் அடிப்படையாக கொண்டு இராணுவ மயமாக்கப்பட்டு தமிழர்களது நிலங்கள் சூறையாடப்படுவதை தடுப்பதற்கு எவ்வாறான திட்டங்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார். இலங்கை அரசு கைக் கொண்டு வரும் காணி மீள் பதிவு நடவடிக்கையின் மூலம் தமிழர்கள் நிலங்கள் பறிக்கபடும் கபட திட்டத்தையும் இதனை அடிப்படையாக கொண்டு தாயகப் பிரதேசத்தில் 1921 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இன விகிதாசாரம் எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என்பதையும் புள்ளி விபர அடிப்படையில் தெளிவு படுத்தினார். இதன் அடிப்டையில் கிழக்கு மாகாணத்தில் சிங்கள இனத்தவர்களின் இன விகிதாசாரம் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
தீர்வுத் திட்டமாக சட்டத்தின் உதவியினூடும் ஐநா மற்றும் சர்வதேச மனித உரிமைகள் நிறுவங்களின் தலையீட்டினூடுமே தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும் என எடுத்துரைத்த அவர் இது குறித்து காலம் தாமதிக்காமல் உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறைகூவல் விடுத்தார்.
பங்களாதேஸ் இந்தியா மற்றும் பர்மா ஆகிய நாடுகளில் இடம் பெற்ற நில அபகரிப்பு தொடர்பில் பல செயற்திட்டங்களை முன்னெடுத்தவரான சபன் அட்னான் அவர்கள் தமது அனுபங்களை மாநாட்டில் பகிர்ந்து கொண்டதுடன் இதனை ஒத்த பிரச்சினையை எதிர் கொள்ளும் தாயகத்து தமிழ் மக்கள் இதனை எவ்வாறு எதிர் கொள்ள முடியும் என்பதையும் உதாரணங்களுடன் எடுத்துரைத்தார். தெற்காசிய நாடான பங்களாதேசில் நான்கு இலட்சம் மக்களின் நிலம் பறிக்கப்பட்டு இராணுவ அடக்கு முறைக்குள் கொண்டு வரப்பட்டிருந்ததை நினைவு கூர்ந்த அவர் தாயகத்தில் தமிழர்களின் நிலமை தொடர்பில் தமது ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார். இலங்கையைப் போலவே பங்களாதேசிலும் குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினர் வலுக்கட்டாயமாக மக்களை வெளியேற்றி நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்தனர். இவை தவிர வன இலாகா தமது கட்டுப்பாட்டின் கீழ் நில உடமையை ஈர்த்திருந்தது மற்றும் அரசின் அபிவிருத்தி எனும் போர்வையில் நிலம் அபகரிக்கப்பட்டமை போன்றவற்றையும் கோடிட்டுக் காட்டியிருந்தார்.
நில ஆக்கிரமிப்பை மேற்கொள்ளும் வகையில் அரசு மேற்கொண்ட உக்தியில் மனித உரிமை மீறல் செயற்பாடுகளே அன்று பங்களாதேஸ் அரசு ஈடுபட்டிருந்தது. இவ்வாறான நிலையே தமிழர் தாயகத்தில் தமிழர்களுக்கும் இடம் பெறுகிறது என குறிப்பிட்ட அவர் இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னரே இந்த நிலைமை தொடர்ந்து வருகிறது எனக் குறிப்பிட்டார்.
வடக்குக் கிழக்கில் 147 இராணுவ முகாம்கள் நிறுவப்பட்டமை உயர் பாதுகாப்பு வலயம் போன்ற திட்டங்கள் அரசின் நில அபகரிப்புத் திட்டத்தினை வெளிப்படையாக கோடிட்டுக் காட்டி நிற்பதை காண்பிக்கிறது என்பதுடன் இராணுவ வீரர்களின் குடும்பங்கள் குடியமர்த்தப்படல் மற்றும் சிங்களக் கிராம ஆக்கத் திட்டங்கள் என்பவை தமிழர் தாயகத்தில் இடம் பெற்று வருகின்றமை இலங்கை அரசின் நில அபகரிப்பு திட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் வலுச்சேர்த்து நிற்கின்றது எனவும் கவலை வெளியிட்டார். இது சர்வதேச சமூகத்திற்குப் புதியதொருவிடயம் அல்ல என குறிப்பிட்ட அவர் ஆசிய பிராந்தியத்திலேயே இந்தியா பங்களாதேஸ் பர்மா ஆகிய நாடுகள் ஓர் சிறந்த உதாரணம் என சுட்டிக்காட்டியதுடன் இலங்கை அரசும் அவ்வழியிலேயே இருப்பதாக எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேராசிரியர் டேவிட் ரம்ரொன் உரைநிகழ்தினார். தமது உரையில் இலங்கையில் அரசியல் ஆட்சி அமைப்பும் தமது அரசியல் இருக்கையினைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் செயற்பட்டு வரும் பேரினவாத சக்திகள் பிரதேசத்தில் தமது வெற்றியினைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் பிராந்தியத்தில் மேற்கொள்ளும் இனப்பரம்பற் போக்கே நில அபகரிப்பிற்கு மூலாதாரமாக விளங்குவதாக எடுத்துரைத்தார். இதன் பின்னணியில் இன அடையாளமே பெருஞ் செல்வாக்குச் செலுத்துவதாகவும் தெரிவித்த அவர் தமிழர் பிரதேசத்தில் சிங்கள ஆதிக்கத்தை பரம்பலடைய மேற்கொண்டு வரும் உக்திகளாக உள்ளதாகச் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் இழக்கப்பட்டு வருவது தமிழ் அடையாளமே ஆகும். இந்த சவாலை எதிர் கொள்வதற்கு தாமதிக்காமல் உடனடியாக சர்வதேச சமுகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மாநாட்டில் கலந்து கொண்டிருந்த ரோசிரியர் யோசின் கிப்லர் உரை நிகழ்த்தினார். இலங்கையில் ஜனநாயகம் குன்றிச் செல்லும் போக்pனை அரசின் உள்நாட்டு நடவடிக்கைகள் மூலம் அடையாப்படுத்திக்காட்டக் கூடியதாக உள்ளது என தெரிவித்த அவர் இதன் ஒரு கூறே நில அபகரிப்பும் சிங்கள மயமாக்கலுமாகும் என குறிப்பிட்டார். ஆட்சியிலிருக்கும் அரசு இன அடையாளத்தை ஆயுதமாக கொண்டு தமது நோக்கத்தை நிறை வேற்றிக் கொள்கின்றமையை காணக் கூடியதாக உள்ளது.
இந்த அடிப்படையியே தமிழர் நில அபகரிப்பும் இடம் பெறுகிறது என சுட்டிக்காட்டினார். இலங்கை அரசு புத்த தர்மம் எனும் மதத்தை அடையாளமாகக் கொண்டு சிங்கள அடையாளத்தை ஊடுருவி ஆயப்பதித்து வருவதை காணக் கூடியதாக உள்ளது. ஜனநாயக அரசு மத இன மொழிக்கு அப்பால் சென்று குடி அனைவரையும் ஒன்றாகவே கொண்டு நடத்தி நாட்டைக் கட்டி எழுப்ப வேண்டும் என கூறிய அவர் எவ்வாறாயினும் இலங்கை அரசு தமிழர் விடயத்தில் இதனை தவற விட்டதுடன் இந்தப் போக்கினையே தொடர்ந்தும் கடைப்பிடித்து வருவதாகவும் சுட்டிக் காட்டினார்.
2009 இல் இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசு தமது ஆளுமையில் குறைந்த முறையற்ற வகையில் போர் தொடுத்திருந்த படையினரை கொண்டு யுத்தத்தை வென்றிருந்த நிலையில் பொருளாதாரத்திலும் சரி இராணுவ ஆளுமையிலும் சரி ஜாம்பவானாக விளங்கும் சில நாடுகள் இலங்கை இராணுவத்தை ஒரு முன்மாதிரி இராணுவமாக கொள்கின்றது.
இதற்கு சீனா ஒரு சிறந்த உதாரணமாகும் என தெரிவித்த அவர் இது நகைப்பிற்குரியது எனவும் குறிப்பிட்டார். இந்த நிலையில் இலங்கையில் தமிழர்களது நிலை குறித்து மேலும் ஆழமாக ஆய்வுகளை மேற்கொண்டு சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
பேராசிரியர் ஜேக்-லிஞ்ச் தமது உரையை ஆரம்பித்தார் இவரது தலைப்பு தமிழர் உரிமைகளுக்கு ஆதரவான குரல் மற்றும் சுதந்திரம் தொடர்பாக அமைந்திருந்ததுடன் அதனை எவ்வாறு கொண்டு நடத்துவது என்பது தொடர்பாகவே இருந்தது. இவரது முதலாவது கேள்வி 21 ஆம் நூற்றாண்டில் இலங்கை அதிபர் மகிந்த யுத்த குற்றவாளியாக இனங்காணப்படுவாரா? என ஆரம்பித்தது.
இறுதி யுத்தத்தின் போது யுத்தக் குற்ற செயல்களில் ஈடுபட்டமைக்கு சான்றான ஆதாரங்களாக இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரக இரகசிய தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்த ஆவணத்தின் மூலம் பெயர்த் தெடுக்கப்பட்டதுடன் 2011 இல் ஐநா அதிகாரிகளின் அறிக்கையில் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்டிருந்தமையையும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே பெருந்திரளாக மக்களை கொன்று குவிப்பதற்கு காரணம் என்ன என வினா தொடுத்த அவர் சர்வதேச ரீதியாக இடம்பெற்ற முந்தைய உதாரணங்களை ஒருங்கிணைத்து விளக்கமளித்தார். இந்த நிலையில் இலங்கைத் தமிழர் பிரச்சினை சர்வதேச ஆர்வலர்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டு அவர்களது கவனத்தையும் ஈர்த்துள்ளது என குறிப்பிட்டார்.
ஆதனைத் தொடர்நது நில அபகரிப்பு தொடர்பாகவும் அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வகையிலும் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன தொடர்பான ஒரு குழு நிலை விவாதம் இடம் பெற்றளது இதில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த முந்நாள் நில ஆணையாளர் திரு குருநாதன் மலேசியாவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராமசாமி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் இடம்பெற்றனர்.
சபையை ஆரம்பித்து வைத்து உரையை தொடங்கிய மட்டக்களப்பு மாவட்டத்தின் முந்நாள் நில ஆணையாளர் ஒளவையார் வாக்கான பிறர் நிலத்தை பறித்து நீ உணவு உண்ணாதே என பொருள்படும் வாக்கியத்தோடு ஆரம்பித்தார். தாயகத்தில் தமிழர்கள் பூமி பறிக்கப்பட்டு தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டு பின் யாருமே வசிக்காத இடத்தில் புத்த ஆலயங்களை நிறுவி வருகின்றது இலங்கை அரசு என சாடினார்.
இது தொடர்பில் தாம் பல முயற்சிகளை நீதி மன்றத்தின் ஊடாக நாடியிருந்ததாகவும் பல சந்தர்ப்பங்களில் கைகள் கட்டப்பட்ட நிலையே காணப்படுவதாகவும் தெரிவித்தார். அத்துடன் தமிழர் நிலங்கள் பேரினவாத சக்கதிகளின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன் காலாகாலமாக இருந்து வந்த ஊர்களின் தமிழ்ப் பெயர்கள் கூட சிங்களத்தில் பெயர் மாற்றப்பட்டு சிங்களப் பெயர்ப்பலகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை மிகுந்த வேதனையை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இலங்கையின் நில உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் எவரொருவரது அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறதோ அந்த நபர் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் இராணுவமயமாக்கப்பட்டுள்ள இலங்கையில் அனைத்தும் கனவாகவே உள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மலேசியாவின் பாராளுமன்ற உறுப்பினர் ராமசாமி தென் கிழக்காசிய வலயத்தில் உள்ள நாடுகளில் இடம்பெற்ற நில ஆக்கிரமிப்பு மனித உரிமை மீறல் செயற்பாடுகள் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட தீர்வுத் திட்டங்கள் குறித்தும் தெளிவு படுத்திப் பேசினார். அதிலும் குறிப்பாக இந்தோனேசியாவில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தெளிவுபடுத்தினார். எவ்வாறாயினும் இந்தோனேசியவில் இடம்பெற்ற அனைத்துத் தீர்வுகளுமே இந்த
விடயத்தில் இலங்கையில் ஒத்துச் செல்லும் என தாம் கருதவில்லை என குறிப்பிட்ட அவர் ஆனதலும் பிரச்சினை இரு நாடுகளிலுமே ஒத்தவையாகவே உள்ளன எனக் குறிப்பிட்டார்.
கடந்த 56 வருடங்களாக ஒரே ஆட்சியின் கீழிருந்தது என மலேசியா குறித்து பேச்சினை ஆரம்பித்த அவர் குறித்த காலகட்டத்தில் பல இனங்கள் ஒன்று சேர்ந்து வாழும் மலேசியத் திரு நாட்டில் பல இனங்களது சின்னங்கள் அழிக்கப்பட்டதாகவும். ஏவ்வாறாயினும் இன்னல்களிலிருந்த நாடு தற்போது பிரச்சினைகளை சீர் செய்து ஒழுங்கான பாதையில் செல்வதாகவும் தெரிவித்தார். எவ்வாறாயினும் இலங்கை விடயத்தில் தமிழர்களின் நிலமை குறித்து அனைவரும் சிந்தித்து தீர்க்கமான தீர்மானங்களை இயற்ற வேண்டி உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இறுதியாக உரை நிகழ்த்திய கஜேந்திர குமார் பொன்னம்பலம். நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக இரண்டு விதமாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர் தமிழர்களுக்கு உரித்தான தனிப்பட்ட நிலங்கள் எவ்வாறு அரசினால் சுவீகரிக்கப்படுகிறது என சுட்டிக்காட்டினார். தனியாருக்கு சொந்தமான நிலங்கள் இராணுவத்தினரால் தேசிpய பாதுகாப்பு என்ற அடிப்படையில் சுவீகரிக்கப்படுகின்றமை சட்டத்திற்கு முரணானவையே என சுட்டிக்காட்டினார்.
இது மாத்திரமல்ல உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டு தமிழர்களது காணிகள் சுவீகரிக்கப்பட்டது. ஏவ்வாறாயினும் நில உரிமைகளுக்காக நீதி உதவியை பொதுமக்கள் மேற்கொண்டாலும் நீதி விடயங்கள் அங்கு தற்போது ஒருபோதும் நடை முறைப்படுத்தப்படப் போவதில்லை. ஆதலால் அவை காலத்தை வீணடிக்கும் செயலாகவே உள்ளது என சுட்டிக்காடடினார்.
இன்றைய நிகழ்வில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்.. நாம் முதலாவதாக இலங்கையின் ஒன்று சேர்த்த பௌத்த அரசியல் பற்றி கரிசனை கொள்ள வேண்டும். சிங்கள பேரினவாதிகள் இந்த நாடு சிங்கள பௌத்த மதத் தலைவர்களுக்கே உரித்தனது என எண்ணுகிறார்கள். ஆதலாலே தமிழர்களுக்கு இடம் இல்லை என மறுக்கிறார்கள். சிங்களமயமாக்கலைப் பற்றியே அனைவரும் பெரும் கரிசனை கொண்டுள்ளனர்.
சிங்கள குடிப்பரம்பலை நாடு தழுவிய ரீதியில் விஸ்தரிக்கும் வகையில் இலங்கை அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு அம்சமாகவே நில ஆக்கிரமிப்பும் இடம்பெற்று வருகின்றது. இதனூடு நாம் விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது என்னவெனில் சிங்கள பேரின வாத சக்திகளின் ஆயுதக் கலாச்சாரமே ஆகும். துமிழ் மக்கள் தொடர்பிலோ அவர்களது எதிர்கால நடைமுறை தொடர்பிலோ அரசு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை. ஆனாலும் இலங்கை அரசு வெளியுலகற்கு தமிழர்களின் மீளக்குடியமர்வு பற்றி கரிசனை காட்டுவதாக கபட நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறது.
இவற்றிலிருந்து நாம் எம்மைக் காப்பாற்றிக் கொள்வதுடன் எமது உரிமைகளை என்றென்றும் பேணிப் பாதுகாக்க வேண்டும். அதற்கான முயற்சிகளையும் செயற்பாடுகளையும் நாம் சர்வதேச சமுகத்தின் உதவியுடன் மேற்கொள்ள வேண்டும். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் உமது மக்கள் ஒன்றிணைந்து இதனை வெற்றிகரமாக முனனெடுப்போம்.

0 Responses to இலண்டனில் இரண்டாவது நாளாகவும் தொடரும் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான மாநாடு!