Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆஸ்கர் விருது பெற்ற அமெரிக்க நடிகர் பிலிப் சீமோர் ஹாப்ஃமன் காலமானார். 46 வயதான இவர் நியூயார்க்கில் உள்ள தனது அபார்ட்மெண்டில் இறந்து காணப்பட்டார்.

அவரது மறைவிற்கு அவரது சக நடிகர்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவர் அளவிற்கு அதிகமாக போதை பொருள் உட்கொண்டதாக தாங்கள் நம்புவதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 2003ஆம் ஆண்டில் பிலிப் நடித்து வெளியான ‘ஓனிங் மாஹோனி’ என்ற திரைப்படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றிய பிரிட்டிஷ் நடிகர் ஜான் ஹர்ட் இவரது மறைவிற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். அவரது மரணம் ஒரு "பேரதிர்ச்சை தந்த இழப்பு" என்றும் திரைத்துறைக்கு அவர் அளித்த பங்களிப்பு ‘பிரம்மாண்டமானது’ என்றும் நடிகர் ஜான் ஹர்ட் விவரித்தார். புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் டாம் ஹான்க்ஸ் மறைந்த நடிகர் பிலிப் ஒரு மாபெரும் திறமைசாலி என்று விவரித்துள்ளார்.

2005ஆம் ஆண்டில் வெளியான ‘கபோட்டி’ என்ற ஆங்கில திரைப்படத்தில் ஒரு எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்த பிலிப் சீமோர் ஹாப்ஃமனிற்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. ஆஸ்கர் விருதுகளில் சிறந்த துணை நடிகருக்கான பிரிவுக்கு மூன்று முறை இவர் பரிந்துரைக்கப்பட்டார் என்பது கவனிக்கதக்கது.

நன்றி : பிபிசி

0 Responses to பிரபல ஹாலிவுட் நடிகர் பிலிப் சீமோர் ஹாப்மன் மரணம் (ஆஸ்கர் விருது)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com