Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இத்தாலி கடற்படை வீரர்கள் இருவர் மீதான வழக்குகளின் முட்டுக் கட்டைகளைத் தகர்க்க மத்திய அரசு ஒரு வார காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

2012ம் ஆண்டு கேரள எல்லையில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர் ஒருவர் மற்றும் கேரள மீனவர் ஒருவர் என இரு மீனவர்களை, இத்தாலி கடற்படையினர் கடல் கொள்ளையர் என சுட்டுக் கொன்றுள்ளனர். இதில் கைது செய்யப்பட்டு கேரள சிறையில் அடைக்கப் பட்டுள்ள இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கு தேசிய குற்றவியல் தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவர அரசு ஆலோசித்து வரும் நிலையில், வீரர்கள் இருவர் மீதான வழக்கை  விரைந்து முடிக்க வேண்டும் என்று இத்தாலி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

வழக்கை  விசாரித்த நீதிபதிகள், இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கின் முட்டுக்கட்டைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், ஒரு வார காலத்துக்குள் வழக்கு பதிவு செய்வது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளனர். 

0 Responses to இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான வழக்கை விரைந்து முடிக்க : உச்ச நீதிமன்றம் உத்தரவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com