Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஹரியானா முதல்வர் பூபிந்த சிங் ஹூடோவை இளைஞர் ஒருவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஞாயிற்றுக் கிழமை பானி பட்டில் அடிக்கல் நாட்டு விழா ஒன்றில் பங்கேற்பதற்காக சென்ற முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடோ, திறந்த வாகனத்தில் நின்றபடி சாலையோரத்தில் காத்திருந்த மக்களை பார்த்து கையசத்தபடி சென்று கொண்டிருந்தார்.

அப்போது கூட்டத்திலிருந்த இளைஞர் ஒருவர், பாதுகாவலர்களை விலக்கிக் கொண்டு முதல்வரின் அருகில் சென்று கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கன்னத்தில் பளாரென அறைந்துள்ளார். அப்போது அங்கிருந்த காவலர்கள் உடனடியாக அந்த இளைஞரை பிடித்து கைது செய்துள்ளனர்.

கமல் முகிஜா என அழைக்கப்படும் குறித்த இளைஞர் ஏதோ ஒரு காரணத்தினால் முதல்வர் மீது கடும் மன அழுத்தத்தில் இருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to ஹரியானா முதல்வருக்கு கன்னத்தில் வீழ்ந்த அறை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com