Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள  அமெரிக்க தெற்கு, மேற்கு ஆசிய நாடுகளின் இராஜாங்க திணைக்கள செயலாளர் நிஷா தேசாய்  பிஸ்வால், குடும்பமாக காணாமல் போனவர்களது உறவுகளை அதிரடியாக சந்தித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இரகசிய இடமொன்றில் இவ்வாறு குடும்பமாக காணாமல் போனவர்களது உறவுகளை அவர் சந்தித்துள்ளார்.

இதன் மூலம் இலங்கை அரசு முன்னெடுத்து வந்த உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான தகவல் திரட்டல் போலியானதென அம்பலமாகியுள்ளது. இலங்கை அரசு முன்னெடுத்த தகவல் திரட்டலில் திட்டமிட்டு குடும்பம் குடும்பமாக காணாமல் போனவர்களது விபரங்களை திரட்ட மறுத்திருந்தது.

அவ்வாறு திரட்டப்பட்ட புள்ளிவிபரங்களையே இலங்கை அரசு ஜெனீவாவில் முன்வைக்கவுள்ள நிலையினில் அது போலியானதென அம்பலப்படுத்தவே  இவ்வாறு குடும்பமாக காணாமல் போனவர்களது உறவுகள் முற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அவர்கள் தமது குடும்ப அங்கத்தவர்கள் புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்கள் சகிதம் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டமையினை அம்பலப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திசிறியை வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து  கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செல் ஜே.சிசனும் உடனிருந்தார். இச்சந்திப்பின் போது, வடமாகாணத்தின் அபிவிருத்திகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளதாக ஆளுநர் அலவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட  பிஸ்வால், யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம், யாழ்.சிவில் சமூகம், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரினைச் சந்தித்ததுடன், யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலயம் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to அம்பலமானது இலங்கை அரசின் போலி புள்ளவிபரம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com