மேல் மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள், தமது சொந்தப் பலத்தை ஒருங்கிணைத்து தேர்தலை வெற்றி கொள்ள வேண்டும். அதனூடு, பேரம் பேசும் பலத்தினை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்தோடு, எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஆளுமைமிக்க தலைவர்களையும், கட்சிகளையும் தேர்தெடுக்க வேண்டும். பாராளுமன்றம், மாகாண சபைகள் உள்ளிட்ட மக்கள் மன்றங்களுக்கு தேர்வாகுபவர்கள் ஆளுமையுடன் பேச வல்லவர்களாக இருக்க வேண்டும். அதுவே, அவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். எங்களால் இங்கு ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ ஆகி விட முடியாது. இந்த பதவிகளை வகிக்க எமக்கு தகுதியில்லை என்றோ, சட்டத்தில் இடமில்லை என்றோ அர்த்தம் கிடையாது. ஆனால், இந்த பதவிகளை ஒரு தமிழரோ, முஸ்லிமோ அல்ல, ஒரு சிங்கள கிறிஸ்தவர் கூட வகிக்க முடியாது. இதன் காரணம், இங்கே அந்தளவுக்கு எல்லா பெரும்பான்மை கட்சிகளுக்குள்ளும் இனவாதம் புரையோடி போயிருக்கின்றது. அதன் காரணம் மோதல்களின் தாம் வெற்றி பெற்று விட்டோம்; தமிழர், முஸ்லிம்களை தோல்வியடைந்துவிட்டர்கள் என அவர்கள் அனைவரும் நினைக்கிறார்கள். இதுதான் இன்றைய புது விதி. இதை எந்தக் காரணம் கொண்டும் மறந்துவிடாதீர்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சொந்தப் பலத்தை ஒருங்கிணைத்து வெற்றிபெற வேண்டும்: மனோ கணேசன்