கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த தங்களுக்கு இன்னும் ஓராண்டு காலம் தேவை என்று அரசாங்கம் தெரிவித்தள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். நல்லிணக்கப் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கைக்க கால அவகாசமும், ஏற்ற சூழ்நிலையும் தேவை.
எழுமாறாக எந்த பரிந்துரைகளையும் உடனடியாக அமுலாக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கையை உள்ளடக்கி, அரசாங்கத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் காணொளி ஒன்றை தயாரித்து, சர்வதேச நாடுகளுக்கு அரசாங்கம் அனுப்பி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
0 Responses to எல்.எல்.ஆர்.சி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இன்றும் ஓராண்டு காலம் தேவை - லலித் வீரதுங்க