Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக யுத்தக் குற்ற விசாரணை ஒன்று முன்னெடுக்கப்படுவது உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் இது சார்ந்த கருத்தை நேற்று வெளியிட்டுள்ளார். 
இலங்கைக்கு எதிராக புதிய யுத்தக் குற்றங்களை முன்வைத்து அவுஸ்திரேலியாவின் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இது சம்பமாக ஐக்கிய நாடுகளின் பேச்சாளரிடம் இன்னர் சிட்டி பிரஸ் இணையத்தளம் கேள்வி எழுப்பிய போதும், உரிய விசாரணைகள் இன்றி இலங்கையின் யுத்தக் குற்றம் தொடர்பில் எதனையும் தெரிவிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில் எதிர்வரும் ஜெனீவா மாநாட்டின் போது இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்ற பிரேரணை நிறைவேற்றப்படுமா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய அவர் அது குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளே தீர்மானிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

0 Responses to விசாரணையின்றி போர்க்குற்ற விசாரணை பற்றிக் கருத்துக்கூற முடியாது - பான் கீ மூனின் பேச்சாளர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com