Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை நகருக்குள் ஆர்ப்பாட்டங்கள் இன்றி தம்மை அனுமதித்தால், தமிழக மீனவர்கள் தொடர்பிலான கேள்விகளுக்கு பதில் வழங்க தயராக இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு அங்கு சென்றுள்ள ரணில். சென்னை வானூர்தி நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு தாம் தற்போது தனிப்பட்ட விஜயமாகவே வந்திருப்பதாகவும், தம்மை சென்னை நகருக்குள் செல்வதற்கு தடையாக ஆர்ப்பாட்டங்கள் முன்கெடுகப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே தம்மை சென்னைக்குள் பிரவேசிக்க அனுமதித்தால், அங்கு செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, தமிழக மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பதில் வழங்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to சென்னைக்குள் அனுமதியுங்கள் தமிழக மீனவர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்குவேன் - ரணில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com