Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போர்க் காலத்தில் பெற்றோரைப் பிரிந்து காணாமல் போன மூன்று சிறுவர்களை நான்கரை வருடங்களின் பின்னர் குடும்பங்களுடன் சேர்த்துள்ளது இலங்கை அரசு. சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த சிறார்கள் மூவரே பெற்றோர்களிடம் மீளவும் இன்று இணைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இறுதிப் போரின் போது பெற்றோர்களைப் பிரிந்திருந்து நலன்புரி முகாம்களிலிருந்து சிறுவர் இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டு உறவினர்களின் தொடர்புகளை இழந்திருந்த சிறுவர்கள் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளால் தரவுகள் பெறப்பட்டு அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்று பெற்றோர்களிடம் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியினால் கையளிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த போரின் போது 700 இற்கும் மேற்பட்ட சிறார்களைக் காணவில்லை எனத் தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் 56 பேர் சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டுவருகின்றமை தொடர்பில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இவர்களில் மூவரே பெற்றோர்களிடம் இணைத்து வைக்கப்பட்டுள்னளர். எனினும் வடமாகாணசபையின் கீழுள்ள சிறுவர் நன்னடத்தை பிரிவு எதற்காக ஆளுநர் சந்திரசிறியை அழைத்து சிறார்களைக் கையளித்ததென கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

0 Responses to இறுதி போரில் காணாமல் போன மூன்று சிறார்கள் கண்டுபிடிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com