மேஷம்
நிலையான வருமானத்திற்கு வழிவகுத்துக் கொள்ளும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமைகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாகன யோகம் உண்டு.
ரிஷபம்
சந்தோஷங்களைச் சந்திக்கும் நாள். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேரலாம். வீட்டை பராமரிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார விரோதங்கள் விலகும்.
மிதுனம்
வளர்ச்சி கூடும் நாள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். சொந்த பந்தங்களின் சந்திப்பால் மனநிறைவு கூடும். வீடு, இடம் வாங்க போட்ட திட்டம் நிறைவேறலாம். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
கடகம்
இடமாற்றத் தகவலால் இதயம் மகிழும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
சிம்மம்
சங்கடங்களைச் சமாளிக்கும் நாள். திட்டமிட்ட சில வேலைகளை மாற்றி அமைக்க நேரிடலாம். உறவினர் வழியிலும், நண்பர்கள் வழியிலும் விரயங்கள் அதிகரிக்கும். வாகனப் பழுதுச் செலவு உருவாகலாம்.
கன்னி
ஆதாயம் அதிகரிக்கும் நாள். நீங்கள் எதிர்பாராத ஒருவர் உங்களுக்கு உதவிகள் செய்ய முன்வருவது கண்டு ஆச்சர்யப்படுவீர்கள். வெளிவட்டாரத்திலிருந்து வியக்கும் தகவல் வந்து சேரும்.
துலாம்
நல்ல தகவல்கள் நாடி வந்து சேரும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். குடும்பத்தில் பற்றும், பாசமும் அதிகரிக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.
விருச்சகம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். வீட்டைச் சீரமைப்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பயணங்கள் அனுகூலம் தருவதாக அமையும்.
தனுசு
விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். வருமானத்தை விட செலவுகளே அதிகரிக்கும். பயணத்தால் சோர்வு, சோம்பல் ஏற்படலாம். விருந்தினரால் தொல்லை உண்டு. தொழில் போட்டிகள் அதிகரிக்கலாம்.
மகரம்
நீண்ட நாளைய ஆசை நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். கணவன், மனைவியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும்.
கும்பம்
உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். விருந்து, விழாக்களில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரலாம். உறவினர்கள் மாலை நேரம் உதவிக்கரம் நீட்டுவர்.
மீனம்
உதிரிவருமானங்கள் வந்து சேரும் நாள். பிள்ளைகள் பொறுப்போடு செயல்படுவது கண்டு பெருமை கொள்வீர்கள். கட்டிடப் பணியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும்.
0 Responses to இன்றைய ராசி பலன் | 13.03.2014