Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்காவின் நியூயார்க் அருகில் கிழக்கு ஹெர்லம் பகுதியின் 114-வது தெருவில் உள்ள ஒரு குடியிருப்பில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. குண்டு வெடித்ததாக நினைத்து பொதுமக்கள் பீதியடைந்து வெளியில் வந்தனர்.

வெடிவிபத்து அமெரிக்க நேரப்படி காலை 9 மணிக்கு நடந்தது. அதிர்ச்சியின் காரணமாக அருகில் இருந்த கட்டிடத்தின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன.  வெடித்துச் சிதறியதால் தீப்பிடித்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வாகனங்களில் 150 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கடும் புகை எழுந்ததால் மீட்புக்குழுவினர் முக கவசம் அணிந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவத்தையடுத்து அருகில் உள்ள மெட்ரோ ரெயில் பாதையில் ரெயில்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

சமையல் எரிவாயு கசிவு காரணமாக சிலிண்டர் வெடித்தாகவும், இந்த வெடிவிபத்துக்கு முன்னர் எரிவாயு கசிவு உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

0 Responses to அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெடிவிபத்து! இருவர் பலி! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com