இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணைக்கு ஆதரவாக 23 வாக்குகள் வழங்கப்பட்டன.
12 வாக்குகள் எதிராக பிரயோகிக்கப்பட்டிருந்த அதேநேரம். 12 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துக் கொண்டிருக்கவில்லை.
இதேவேளை இந்த பிரேரணையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சர்வதேச பொறிமுறைகளை அமுலாக்குவதற்கு 1460000 அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்று மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனைத் தொடர்பில் இந்த நிதி ஒதுக்கம் செய்யப்படும் வரையில், இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பை ஒத்தி வைக்குமாறு கோரிய யோசனை ஒன்றை பாகிஸ்தான் சமர்ப்பித்தது. இதனை ரஷ்யாவும், சீனாவும் ஆதரித்தன.
எனினும் அமெரிக்கா இந்த யோசனைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவின் பிரேரணை குறித்த வாக்கெடுப்பு இன்றே நடத்தப்பட்டிருந்தது.
ஆதரவாக வாக்களித்த நாடுகள்
01. ஆர்ஜென்ரினா
02. வெனின்
03. ஒஸ்திரியா
04. பொஸ்சுவானா
05. பிரேசில்
06. சிலி
07. கொஸ்தரிக்கா
08. கொத்து இவ்வோர்
09. செக் குடியரசு
10. எஸ்தோனியா
11. பிரான்ஸ்
12. யேர்மனி
13. அயர்லாந்து
14. இத்தாலி
15. மெக்சிக்கோ
16. மொன்றிநீக்குறோ
17. பெரு
18. தென்கொரியா
19. ரூமேனியா
20. சியாரோலியன்
21. மனிடோனியா
22. இங்கிலாந்து
23. அமெரிக்கா
ஆகிய நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன.
எதிராக வாக்களித்த நாடுகள்
01. சீனா
02. ரஷ்யா
03. கொங்கோ
04. அல்ஜீரியா
05. கென்யா
06. மாலைதீவுகள்
07. பாகிஸ்தான்
08. சவூதி அரேபியா
09. ஐக்கிய அரபு இராச்சியம்
10. வெனிசுவேலா
11. வியட்நாம்
12. கியூபா
ஆகிய நாடுகள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.
வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத நாடுகள்
01.இந்தியா
02. இந்தோனேசியா
03. ஜப்பான்
04. தென் ஆபிரிக்கா
05. கஸ்கஸ்தான்
06. குவைத்
07. மொராக்கோ
08. நமீபீயா
09. பிலிப்பைன்ஸ்
10. புர்கினா பாசோ
11. காபோன்
12. எதியோப்பியா
ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
0 Responses to இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணை 23 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது!