Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் (2008-2009) பற்றிய அய்.நா. விசாரணைக் குழுவின் அறிக்கை அடிப்படையில் மேலும் விசாரணைக்குட்படுத்தி, மனித உரிமை மீறல்களுக்கு நடவடிக்கை எடுக்க வற்புறுத்திடும், அய்.நா. மனித உரிமை ஆணையக் குழுத் தலைவர் நவநீதம் பிள்ளை அவர்கள் இதுபற்றி ஒரு சர்வதேச (சுதந்திர) விசாரணை தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார். அதை வரவேற்கிறோம்.

அய்.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் எதிர்பார்த்த முறையில்  அமையவில்லை என்ற போதிலும், அது நிறைவேற்றப்பட இந்திய அரசு தனது பங்களிப்பை உலகத் தமிழர்கள் பாராட்டும் அளவுக்குச் செய்யவேண்டியது அவசர அவசியமாகும்! இனப்படுகொலை (நிமீஸீஷீநீவீபீமீ) என்பது தீர்மானத்தில் இடம்பெறுவதே நியாயமாகும்.

இலங்கை அரசு, ‘எங்களை யார் - என்ன செய்துவிட முடியும்?’ என்று சவால் விடுகிறது; காரணம், சீனா போன்ற நாடுகள் தங்களுக்கு ஆதரவு அளிக்கும் என்ற ஒரு ‘குருட்டுத் தைரியம்’தான் போலும்! இதை இந்திய அரசு கவனத்தில் கொள்வது அவசியம்.

உலக நாடுகளின் கவனம் - கடமை - ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைப் பாதுகாப்பை உறுதி செய்வது! இது தேவை - கட்டாயம் தேவைப்படுகிறதே!

இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.

0 Responses to ஈழத் தமிழர் வாழ்வுரிமை உறுதி செய்யப்பட உலக நாடுகளின் கவனம் - கடமை தேவை: கி.வீரமணி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com