இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தலில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகளை அரசுடமையாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக மீன்பிடித்துறை மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வரையில் ஏற்பகவே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களை மீறும் வகையில் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, எதிர்காலத்தில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர் படகுகளை அரசுடமையாக்க தீர்மானித்துள்ளதாகவும், அதன் மூலமாவது அத்துமீறல்கள் குறையுமென்று எதிர்பார்ப்பதாகவும் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
0 Responses to இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களின் படகுகள் அரசுடமையாக்கப்படும்: ராஜித சேனாரத்ன