இலங்கைக்கு எதிரான அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு, தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை பிரித்தானிய பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
ஹேக்கில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் வைத்து தாம் இந்த வலியுறுத்தலை விடுத்ததாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரோன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பிரேரணை இன்றையதினம் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு தென்கொரியா, ஜப்பான், கசகஸ்தான் போன்ற நாடுகள் எதிராக வாக்களிக்கும் என்று நம்பப்பட்டது.
இந்த நிலையில் தாம் அந்த நாடுகளை அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு கோரி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஜப்பான் மற்றும் கசகஸ்தான் ஆகிய நாடுகள் இந்த பிரேணை தொடர்பான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது என்றும், தென்கொரிய எதிராக வாக்களிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
0 Responses to பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு தென்கொரியா மற்றும் ஜப்பானிடம் டேவிட் கெமரூன் கோரிக்கை!