Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முக.அழகிரி-தயாளு அம்மாள், முக.அழகிரி-கனிமொழி சந்திப்பு

இன்று நிகழ்ந்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் திமுகவிலிருந்து அறவே நீக்கப்பட்ட முக. அழகிரி, ஊடகங்களுக்கு பல்வேறு விதமாக  தகவல்கள் வெளியிட்டு வருகிறார். நேற்று மதுரையிலிருந்து  சென்னை வந்த அழகிரி, நேற்று மாலை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு சென்று, தாயார் தயாளு அம்மாளை சந்தித்துள்ளார். அப்போது கருணாநிதி சேப்பாக்கம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். தயாளு அம்மாள் உடல்நிலை சரியில்லாமல்  இருப்பதாகவும்,அவரை சந்திக்கவே அழகிரி கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றார் என்றும் கூறப்படுகிறது.

இதை அடுத்து இன்று, சிஐடி நகரில் உள்ள கனிமொழி இல்லத்துக்கு அழகிரி சென்று அவரையும் சந்தித்துள்ளார். இது அரசியல் தொடர்பான ஆலோசனை சந்திப்பு என்றும் கூறப்படுகிறது. இதுக் குறித்து வேறு எதுவும் தகவல் வெளிவராத நிலையில், அழகிரி குறித்து தமிழக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.

0 Responses to முக.அழகிரி-தயாளு அம்மாள், முக.அழகிரி- கனிமொழி சந்திப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com