வவுனியாவிலுள்ள கிராமங்களில் நள்ளிரவு வேளையில் சிவிலுடை தரித்த இராணுவத்தினர் தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவின் பிரதான கிராமங்களான பூந்தோட்டம், அண்ணாநகர், மகாரம்பைக்குளம், கருப்பணிச்சங்குளம் மற்றும் காத்தார்சின்னக்குளம் கிராமங்களில் புதன் நள்ளிரவில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட இராணுவத்தினர் நேற்று வியாழன் நண்பகல் வரை அதனைத் தொடர்ந்தனர். இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றுக்காலை தமது கடமைகளுக்காக வீட்டிலிருந்து புறப்பட்ட பொதுமக்கள் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரால் ஆங்காங்கே அடையாள அட்டை பரிசோதனை மற்றும் கேள்விகள் கேட்கப்பட்டே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
வவுனியாவில் ஏனைய பகுதிகளிலும் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தின் சுதந்திரபுரம் மற்றும் இருட்டுமடு கிராமங்களும் சுற்றிவளைக்கப்பட்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கிராமத்தவர்களை ஒரு பொது மைதானத்திற்கு விசாரணைக்கு கொண்டு சென்றிருப்பதாகவும் தெரிய வருவதாக சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to வவுனியாவில் நள்ளிரவு வேளையில் இராணுவம் தேடுதலில் ஈடுபடுகிறது: சிவசக்தி ஆனந்தன்