Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்க வேண்டுமென சர்வதேச சமூகம் எண்ணுமேயானால், ராஜபக்சவை அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வரவேற்கிறேன்.

தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய அரசு, வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருப்பது சர்வதேச நெறிமுறைகளுக்கும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

இலங்கை தீர்மானம் பற்றிய சூடான ஒரு விவாதம்!! (காணொளி இணைப்பு)

ஒரு நாட்டின் விவகாரத்தில் தலையீடு செய்வதாக இந்தியா கருத்துத் தெரிவித்திருப்பது சர்வாதிகாரிகள் வழக்கமாகச் சொல்லும் காரணத்தை இந்திய அரசு வழிமொழிந்திருப்பது வேதனை அளிக்கிறது.

தற்போது, நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் அடிப்படையில் சுதந்திரமான விசாரணை நடத்தப்படவேண்டுமெனில், இலங்கையின் அதிபர் பதவியிலிருந்து ராஜபக்ச நீக்கப்பட வேண்டும்.

அவரை அதிபராக வைத்துக்கொண்டு அங்கு நியாயமான விசாரணையை நடத்த முடியாது.

உண்மையிலேயே போர்க் குற்றங்களுக்கு நீதி வழங்க வேண்டுமென சர்வதேசச் சமூகம் எண்ணுமேயானால், ராஜபக்சவை அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

0 Responses to நீதி விசாரணை சரியாக நடக்க ராஜபக்சவை பதவி நீக்க வேண்டும்! - திருமாவளவன் வேண்டுகோள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com