ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைக் கண்டு சோர்ந்து போகவில்லை என்றும், அந்தத் தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் எந்த வகையிலும் உதவாது. அது, இலங்கையில் பிரச்சினைகளையே தோற்றுவிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் இனநல்லிணக்கம் மற்றும் மறுவாழ்வுக்கான பணிகள் தொடர்பில் முறையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவ்வாறான நிலையில் இலங்கை மீது சர்வதேச தலையீட்டுடான விசாரணை கோரும் தீர்மானம் பொருத்தமற்றது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
0 Responses to இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் வெற்றி பெற்றதைக் கண்டு சோர்ந்து போகவில்லை: மஹிந்த