இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தொடர்ச்சியான கவனம் அவசியம் என்று வலியுறுத்தியுள்ள அமெரிக்கா, இலங்கை இதயசுத்தியுடனான நல்லிணக்கம், போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல், ஜனநாயக நல்லாட்சி உள்ளிட்ட விடயங்களில் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் நேற்று புதன்கிழமை இலங்கை மீதான தீர்மானம் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடல் இடம்பெற்ற போதே ஜெனீவாவுக்கான அமெரிக்கப் பிரதிநிதி போலா ஸ்டீபர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முன்வைத்த அறிக்கைக்கும் அவர் நன்றி வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் மதச் சிறுபான்மையினர் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பிலும் அமெரிக்கா கவனத்தில் கொண்டுள்ளதாகத் தெரிவித்த போலா ஸ்டீபர், மத சுதந்திரம், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கான உரிமை, ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக இயங்குவதற்கான சூழ்நிலை ஆகியவை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.
இதனிடையே, இலங்கைக்கு எதிரான அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்னும் சில மணித்தியாலங்களில் இடம்பெறவுள்ளது.
0 Responses to இலங்கை இதயசுத்தியுடன் நல்லிணக்கத்தை முன்னெடுக்க வேண்டும்; ஐ.நா.வில் அமெரிக்கா!